23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
அந்தக்கால காமெடி நடிகர்களில் ஒருவர் டி.எஸ்.துரைராஜ். பாய்ஸ் நாடக குழுவில் இருந்த அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் பிரபலமான நடிகராக முடியவில்லை. என்றாலும் திருநீல கண்டர், சகுந்தலை படங்களில் இவரது காமெடி நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் 'மரகதா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஏமாற்றம் தந்ததால் கடும் பொருளாதார சிக்கலில் மாட்டினார். இறுதியாக தானே ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். அதுதான் 'பானை பிடித்தவன் பாக்கியசாலி'.
இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக சாவித்ரி நடித்தார். அவருடன் டி.எஸ்.துரைராஜ், கே.பாலாஜி, ஆர்.நாகேஸ்வரராவ், டி.பி.முத்துலட்சுமி, வி.எஸ்.ராகவன், அங்கமுத்து உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல்கோஷ் என்கிற வங்க மொழி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1958ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. டி.எஸ்.துரைராஜ் தனது பொருளாதார சிக்கலை தீர்த்தார்.