இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமா உலகில் 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் இயக்குனர் ராஜா, ஜெயம் ரவி. அண்ணன், தம்பிகளான இவர்கள் பல படங்களுக்கு எடிட்டிராகப் பணியாற்றிய மோகனின் மகன்கள் ஆவர். அண்ணன், தம்பி இருவரும் இணைந்து சில வெற்றிப் படங்களைத் தமிழில் கொடுத்திருக்கிறார்கள்.
ராஜா பின்னர் தன் பெயருடன் அப்பா மோகன் பெயரைச் சேர்த்துக் கொண்டு மோகன் ராஜா ஆகிவிட்டார். சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற ராஜா தெலுங்குப் படமான 'அனுமன் ஜங்ஷன்' மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பிறகு எட்டு தமிழ்ப் படங்களை இயக்கி முடித்த ராஜா மீண்டும் இயக்கிய தெலுங்குப் படமான 'காட்பாதர்' சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வாரம் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்களது மகன்களில் இரண்டு படங்களின் போஸ்டர்கள் முன்பும் நின்று கொண்டு அவர்களது பெற்றோர் மோகன், வரலட்சுமி ஆகியோர் புகைப்படும் எடுத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'பெருமையான பெற்றோர்' என மோகன்ராஜா பதிவு செய்துள்ளார். அதை ஜெயம் ரவியும் ரிடுவீட் செய்துள்ளார்.