ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன் திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனதை வென்றவர் சுனிதா. தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலுமே சுனிதா கலந்து கொண்டு காமெடியில் கலக்கினார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் இன்ஸ்டாவில் மட்டும் 1.4 மில்லியன் நபர்கள் சுனிதாவை பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் சுனிதா உரையாடி உள்ளார். அப்போது, மிகவும் அநாகரீகமான முறையில் நெட்டிசன் ஒருவர் சுனிதாவை பிகினி உடையை திறந்து காண்பிக்க சொல்லி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் கடுப்பான சுனிதா, அந்த மெசேஜ் அனுப்பிய நபரின் புரொபைலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஸ்டோரியில் வைத்து 'நீ ஒரு கோழை' என கடுமையாக திட்டியிருக்கிறார். இதனையடுத்து சுனிதாவின் ரசிகர்களும் அந்த நெட்டிசனை பிடித்து வாட்டி எடுத்து வருகின்றனர்.