ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
90களின் காலகட்டத்தில் பாலிவுட்டில் கலக்கி வந்தவர் நடிகர் கோவிந்தா. இவரும், மனைவி சுனிதா அஹூஜாவும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனிதா சமீபகாலமாக எந்தவொரு நிகழ்விலும் கணவர் கோவிந்தா உடன் பங்கேற்கவில்லை. இதுப்பற்றி அவர் கூறுகையில், கோவிந்தாவுடன் தான் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றும், தனது குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசிப்பதாகவும், கோவிந்தா அதற்கு எதிரே உள்ள பங்களாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இது இவர்களது பிரிவை உறுதிப்படுத்தியது.
தொடர் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், அதுவே அவர்களது உறவில் விரிசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. திருமணமாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விவாகரத்து செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருந்தும், இந்த தகலை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.