நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட் திரையுலகில் ஒரு பக்கம் கான் நடிகர்களின் ஆதிக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனக்கென ஒரு தனி ரூட்டில் பயணித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கோவிந்தா. சமீபத்தில் நடிகை கஜோல் நடத்தும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற கோவிந்தா ஒரு படத்தில் சம்பளமாக ஒரு டஜன் வாழைப்பழத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்த ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறும்போது, “தயாரிப்பாளர் சுபீர் முகர்ஜியின் தாயார் எனது அம்மாவிற்கு ஒரு இக்கட்டான தருணத்தில் ரொம்பவே உதவி செய்திருந்தார். அதனை தொடர்ந்து சுபீர் முகர்ஜியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தபோது அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறிவிட்டு ஒரு டஜன் வாழைப்பழமும், ஒரு தேங்காயும் மட்டும் சம்பளமாக கொடுங்கள் எனக்கூறி அதை பெற்றுக்கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார்.