நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இந்த தொடரில் மனிஷா ஜித், திவ்யபத்மினி, சந்தோஷ், மனுஷ், அம்மு ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை கதைக்களமாக இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அண்மையில் 100வது எபிசோடை கடந்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினர். இனி வரும் நாட்களில் ஹீரோயினின் திருமணம் என சுவாரசியமான எபிசோடுகள் வர இருக்கிறது.
இந்நிலையில், தொடரின் நாயகி மனிஷா ஜித் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அவர் நடித்த எபிசோடுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒளிபரப்பாகும் எனவும், அதன்பிறகு புது ஹீரோயின் நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் எனவும் செய்திகள் உலா வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்த மனிஷா ஜித் சீரியலை விட்டு விலகியுள்ள நிலையில், புதிதாக யார் கதையின் நாயகியாக நடிக்கப்போகிறார்? அவரால் மனிஷா ஜித்தின் இடத்தை நிரப்ப முடியுமா? என்ற கேள்வி நேயர்களிடம் எழுந்துள்ளது.