300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
சின்னத்திரையின் வில்லி நடிகையான ஸ்வேதா ஸ்ரிம்டன், ஜீ தமிழின் 'சித்திரம் பேசுதடி' மற்றும் 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய தொடர்களின் மூலம் மீடியா வெளிச்சத்தை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். மாடலிங்கில் அறிமுகமாகி திரைத்துறையில் பயணித்து வரும் ஸ்வேதாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. இதற்காக பல வருடங்களாக கடுமையாக முயற்சித்து வந்த ஸ்வேதா, பல குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் உட்பட 'ஆடை' மற்றும் 'நயம்' ஆகிய பாடங்களில் கிளாமராக நடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், திரைப்பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. இயக்குநர் தம்பி ராமையா இயக்கும் 'ராஜா கிளி' படத்தில் ஸ்வேதா ஸ்ரிம்டன் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள அவர் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு '9 வருட போராட்டத்திற்கு பிறகு என் கேரியரில் அடுத்தக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வேதாவுக்கு சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.