டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு (அம்மா) சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவரானது இதுதான் முதன்முறை.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்வேதா மேனன் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகள், மனகசப்புகள் காரணமாக சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது "சங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை, சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் உள்பட ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் வந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவேன். ஆனால், விலகியவர்களை சேர்ப்பது முக்கிய பணி அல்ல. அதைவிட முக்கியமான பணிகள் காத்திருக்கிறது. என்றாலும் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நடிகர் சங்கத்தின் வாசல் திறந்தே இருக்கும்" என்கிறார் ஸ்வேதா.




