'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில தினங்களுக்கு முன் திடீரென சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கினார். அவரை கவுன்சிலிங்கிறாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பியிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு பிறகு வெளியே வந்த ஸ்ரீநிதி 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என கெத்தாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமுதலே அவரது பாலோவர்களும் ரீ-ஆக்டிவ் ஆகி ஸ்ரீநிதியின் பதிவுகளை விடாமல் துரத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி நடிகை ஷகிலா மற்றும் ஸ்ரீநிதியின் அம்மா மூவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட பதிவில், 'த்ரீ இன்டிபெண்டண்ட் வுமன்... ஷகீலா அம்மாவுக்கு நன்றி சொல்லமாட்டேன். நீங்க என்ன நல்ல புரிஞ்சிக்கிட்டீங்க. மனசாரா உங்களுக்கொரு முத்தம் கொடுத்தேன் அது போதும்' என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் ஸ்ரீநிதியும், ஷகீலாவும் கண்ணத்தோடு கண்ணம் வைத்து ஒட்டி நிற்கும் புகைப்படத்தையும் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார்.