ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலின் இளைஞர்களுக்கு பிடித்தமான டிவி பிரபலங்களில் ஒருவர். வீஜே ரக்ஷனுடன் சேர்ந்து பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சினிமாவிலும் 'கோலமாவு கோகிலா' படத்தில் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 'தேன்மொழி பிஏ' மற்றும் 'அன்புடன் குஷி' ஆகிய டிவி தொடர்களிலும் ஜாக்குலின் நடித்தார். சமீபகாலமாக இவரை தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்க முடியவில்லை. முழுநேர நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஜாக்குலின் அதற்காக பிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஜாக்குலின் நடிக்கும் போதும், அங்கரிங் செய்யும் போதும் சில நெட்டிசன்கள் அவர் குண்டாய் இருப்பதை வைத்து உருவ கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஜாக்குலின் பகிர்ந்துள்ளார்.