அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரை நடிகையான வனஜா தனது திரையுலக பயணத்தில் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இன்றுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு அதிக ரீச் கொடுத்தது என்றால் 'மெட்டி ஒலி' தொடரின் லீலா கதாபாத்திரமும், சிங்கம் படத்தில் அவர் நடித்திருந்த பெண் ரவுடி கதாபாத்திரமும் தான். பற்களில் பான்பராக் கறையுடன் பார்ப்பதற்கே முரட்டு பெண்ணாக தோற்றமளித்த வனஜா, படத்தில் சில நிமிட காட்சிகளிலே வந்தாலும் நடிப்பில் மிரட்டியிருப்பார். மெட்டி ஒலியின் லீலா கதாபாத்திரத்திற்கு பிறகு வனஜாவை அதிக பிரபலபடுத்திய கதாபாத்திரம் இதுவே ஆகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனஜா, அதில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், 'அந்த படத்தில் ஏன்டா நடிச்சோம்னு இருக்கும். படத்த பார்த்துட்டு நிறைய பேர் உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைன்னு கேட்டாங்க. அந்த கேரக்டரில் நான் நடிக்க காரணம் ஹரி சார் தான். என் கணவர் ஹரி சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தாரு. எங்களுக்கு அப்போ கல்யாணம் ஆகல. நான் ஷூட்டிங் போகும் போது பான் பராக் போட சொன்னாங்க. நான் முடியவே முடியாது, நடிக்கவே மாட்டேன்னு மறுத்துட்டேன். அந்த படத்தோட முதல் நாளே எனக்கு என் கணவருக்கும் சரியான சண்டை. அப்புறம் என்னோட அப்பா தான் சமாதானம் செஞ்சு என்ன நடிக்க வச்சாரு. ஆனா, மெட்டி ஒலிக்கு அப்புறமா எனக்கு அதிக ரீச் கொடுத்தது சிங்கம் படம் தான்' என கூறியுள்ளார்.