ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிகர்களாக ஜோடியாக அறிமுகமான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா தற்போது நிஜ வாழ்விலும் அழகான ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதியருக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்கு ஒன்பதாவது மாதம். எனினும், ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார்.
தற்போது ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் மார்ச் 24 ஆம் தேதி ஆல்யாவுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதி கொடுத்துள்ளனர். அதே மாதத்தில் 20 ஆம் தேதி அய்லா பாப்பாவுக்கு பிறந்த நாள். எனவே, அய்லா பாப்பாவின் பிறந்தநாளையும், ஆல்யாவின் ஒன்பதாவது மாத வளைகாப்பையும் ஒன்றாக கொண்டாட சஞ்சீவ் முடிவு எடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சஞ்சீவ் - ஆல்யாவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




