தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வந்த நடிகை குஷ்பு, சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக 'லெஷ்மி ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்த அவர், அதன்பின் பெரிதாக சின்னத்திரையில் நடிக்கவில்லை. அரசியலில் தீவிரம் காட்டினார். இடையில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். சில சீரியல்களில் கெஸ்ட் ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில், குஷ்பு நடிக்கும் புதிய சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மீரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை குஷ்புவே கதை எழுதி உள்ளார். இந்த தொடர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீரா தொடரின் படப்பிடிப்பு மற்றும் பூஜைக்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.