பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருபவர் கண்மணி மனோகரன். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து தற்போது சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் சின்னத்திரை நடிகருடன் இவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது. தற்போது அவர் புது சீரியல் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக உருவாகி வரும் அந்த தொடரில், கலர் தமிழ் சேனலில் மாங்கல்ய தோஷம் தொடரில் நடித்த அருண் பத்மநாபன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.