பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஈஸ்வர் தனது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீயுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சில காலங்கள் நடிப்பில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவர் நீண்டநாள் கழித்து அன்பே சிவம் தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அன்பே சிவம்' தொடர் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் ஸ்ரீ, ரக்ஷா ஹோலா, கிருத்திகா லட்டு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இரண்டு தம்பதியினருக்கு இடையே நடக்கும் மோதலையும், காதலையும் மையப்படுத்தி சென்டிமெண்ட், ஆக்சன் என திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த தொடரில் நியூ என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.