எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளரான அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த நிகழ்வு தற்போது பரபரப்பாக சமூகவலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் என்றாலே கிசுகிசு தான். ஆனால், இந்த முறை சீசன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையிலும் பெரிதாக எந்த கிசுகிசுவும் பேசப்படவில்லை. முந்தைய எபிசோடுகளை ஒப்பிடும் போது இந்த எபிசோடு பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. ஆனால், பிக்பாஸ் 5 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்போது தான் விஷயம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒருபக்கம் பிரியங்கா, நிரூப், ராஜூ, அக் ஷரா என சண்டைக்கோழிகள் சுற்றிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் அமீர் - பாவனி -அபிநய் என காதல் ரீல் ஓடியது.
போன வார எபிசோடில் தான் அபிநய் - பாவனி காதல் விவகார சர்ச்சை முடித்து வைக்கப்பட்டது. இந்தவாரம் அபிநய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிறே்றப்பட்டார். இதற்கிடையில் தற்போது அமீரும் பாவனியை காதலிப்பதாக சொல்லவே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்திய எபிசோடில் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த பாவனியை அமீர் நெருங்கி சென்று ரகசியம் பேசுவது போல் திடீரென முத்தமிட்டார். இதனால் ஒரு கணம் பாவனி அதிர்ச்சியடைந்தாலும் அமீரின் அந்த செயல் தனக்கு பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்ததோடு விட்டுவிட்டார்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாவனி ரசிகர்கள் ஆர்ம, அமிரீன் இந்த செயலுக்கு ஓப்பனாக கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்.
ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்பெஷல் எபிசோடில் பேசும் பிக்பாஸ் அமீரின் இந்த முத்த சர்ச்சையை குறித்து எதுவும் பேசவில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கே பஞ்சாயத்து பேசும் பிக்பாஸ், இந்நிகழ்வை அசால்ட்டாக கடந்து சென்றது எப்படி என ரசிகர்கள் கமல்ஹாசனை கேள்வி எழுப்பி வருகின்றனர்.