தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் |
சீரியலில் இருந்து விலகிய பிறகும் சரவண விக்ரமுடன் நட்புடன் பழகும் விஜே தீபிகாவை பார்த்து 'நீங்கள் காதலிக்கிறீர்களா?' என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
விஜய் டிவி சீரியல்களில் சூப்பர் ஹிட் அடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா சில நாட்கள் நடித்து வந்தார். தீபிகா, ஐஸ்வர்யாவாக நடித்த போது சரவண விக்ரம் - தீபிகா ஜோடி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக டிரெண்டாகி வந்தது. இதற்கிடையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தீபிகா சீரியலை விட்டு விலகினார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே தீபிகாவும் சரவண விக்ரமும் நட்புடன் பழகி வந்தனர்.
இருவரும் சேர்ந்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அப்டேட்டுகளை வெளியிட்டும் வந்தனர். அப்போதே பலரும் நீங்கள் காதலர்களா? என கேட்டு வந்தனர். அதற்கு பதிலளித்த இருவரும் 'நாங்கள் சிறந்த நண்பர்கள் மட்டும் தான்' என்று விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தீபிகா கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோக மையத்தில் சரவண விக்ரமுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தீபிகா, சரவண விக்ரம் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் 'உண்மையாவே நீங்க லவ்வர்ஸா? சொல்லுங்க?' என கமெண்டுகளில் இருவரையும் டார்ச்சர் செய்து வருகின்றனர்.