5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில தமிழ் தொலைக்காட்சி உலகில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக பிரபலமானார். தற்போது விஜய் டிவியின் முக்கிய தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். சின்னத்திரையில் ரசிகர்கள் பலரது மனங்களை கொள்ளை கொண்ட வைஷ்ணவிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை சீரியல்களில் தன் நடிப்பினால் அசத்தி வந்த அவர் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த செய்தியை அண்மையில் பகிர்ந்த வைஷ்ணவிக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.