இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு மற்றும் பலர் நடிக்கும் படம் தயாரிப்பில் உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் தலைப்பு குறித்து கடந்த வாரம் அறிவிப்பதாக இருந்தார்கள். ஆனால், கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் அடைந்ததால், அந்த நிகழ்வைத் தள்ளி வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். சென்னையில் பிறந்து வளர்ந்தவரான ஹர்ஷவர்தன் இதற்கு முன்பு தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், 3:33, ஜோதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2017ல் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தி, தெலுஙகு, மலையாளம் ஆகிய மொழிகளில் இசையமைத்துள்ளார்.
'அனிமல்' ஹிந்திப் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றவர் ஹர்ஷவர்தன். தற்போது தமிழில் ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.