ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஆல்யா மானசாவை மாகாபா கலாயத்து தள்ளும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை வீஜே மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி 2 தொடரின் நடிகர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். சித்து, ஆல்யா, வைஷ்ணவி ஒரு அணியாகவும் வீஜே அர்ச்சனா, பிரதோஷ், பாலாஜி மற்றொரு அணியாகவும் விளையாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ராஜா ராணி 2 சீரியலை செமயாக கலாய்த்து தள்ளும் மாகாபா சீரியலின் பெயரை மாமியார் மருமகள் என்று வைத்திருக்க வேண்டும் என கமெண்ட் அடிக்கிறார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு டாஸ்கான சவுண்ட் பார்ட்டி சுற்றில் பாடலின் ராகத்தை வைத்து வரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என தரப்படுகிறது. அப்போது ஆல்யா காதலன் படத்தின் பேட்ட ரேப் பாடலை வாய்க்கு வந்தபடி உளறி குரோம்பேட்டையை ரோம்பேட்டை என்று பாடுகிறார். இதனால் ஆல்யாவை மாகாபா அவர் ஸ்டைலில் வச்சு செய்கிறார். பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.