ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மா கா பா மற்றும் ப்ரியங்கா ஜோடி இணைந்து சுவாரசியமாக தொகுத்து வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்ட போது ப்ரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக மைனா நந்தினி மா கா பா உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் வந்த ப்ரியங்கா நிகழ்ச்சியில் ஆங்கராக எண்ட்ரி கொடுத்ததால் நந்தினி வெளியேறினார். ஆனால் ப்ரியங்கா, பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுடன் மீட்டிங் என அடிக்கடி ப்ரேக் என கழன்று சென்றதால் ஒருவார எபிசோடிலேயே அவருக்கு பதிலாக மீண்டும் மைனா நந்தினி உள்ளே நுழைந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ப்ரியங்கா ஆங்கராக என்ட்ரி கொடுத்துள்ளார். அதேசமயம் ஏற்கனவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மா கா பாவும் மைனா நந்தினியும் வெளியேறியுள்ளனர். மா கா பாவுக்கு பதிலாக கலக்கப் போவது யாரு குரேஷி ப்ரியங்காவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இது என்ன உள்ளே வெளியே ஆட்டம் என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர். விஜய் டிவி நிகழ்ச்சி வரலாற்றிலேயே ஆங்கர்கள் இந்த அளவுக்கு ஸ்வாப் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இந்த வாரம், தல - தளபதி ரவுண்டாக ஸ்பெஷல் எபிசோடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா கலந்து கொள்கிறார். ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.