ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீயின் கணவர், தன் மனைவியின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு தான் காரணமில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் மீது அவரது மனைவியும், நடிகையுமான ஜெயஸ்ரீ, கடந்த 2019 வருடம் ஈஸ்வர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஈஸ்வரும் ஜெயஸ்ரீயும் பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உயிருக்கு ஆபத்து, ஏதாவது நேர்ந்தால் அதற்கு தான் காரணமில்லை என காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் ஈஸ்வர். புகார் அளித்த பின் அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜெயஸ்ரீ தற்போது எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மருத்துவர் ராகேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களின் இந்த உறவு ராகேஷின் தந்தை சண்முகத்திற்கு பிடிக்கவில்லை.
தொழிலதிபர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான சண்முகம் ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என என்னிடம் புலம்பினார். எனது விவாகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அதுகுறித்து பேச முடியாது என்று கூறினேன். ஆத்திரமடைந்த அவர் ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் அவள் மீது காரை ஏற்றி கொலை செய்துவிடுவேன் என்று கூறினார். இதனால் ஜெயஸ்ரீக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்' என கூறியுள்ளார்.
மேலும், ஜெயஸ்ரீ பணம் பறிக்கும் நோக்கத்தில் பல பேரிடம் பழகி வருவதாகவும், பொய் காரணங்களை சொல்லி விவகாரத்து வழக்கில் ஆஜராகமால் எஸ்கேப் ஆகி வருவதாகவும் அந்த பேட்டியில் ஈஸ்வர் கூறினார்.