ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகாவின் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திருமணத்தில் வைஷாலியின் கழுத்தில் தாலி ஏறும் சமயத்தில் அவர் உணர்ச்சி வசப்பட்டு அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சி நடிகையான வைஷாலி தனிகா, சத்யதேவ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் அண்மையில் தாங்கள் காதலித்து வருவதை ரசிகர்களுக்கு தெரிவித்து விரைவில் திருமணம் நடைபெற போவதாகவும் சொல்லி இருந்தனர். இருவரின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து அவரது திருமணம் சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்தின் போது சத்யதேவ் வைஷாலியின் கழுத்தில் தாலியை கட்ட, அப்போது உணர்ச்சிபெருக்கில் வைஷாலி தனிகா கண் கலங்கி ஆனந்த கண்ணீர் சிந்தினார். இதன் வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் வைஷாலிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.