எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் |
சென்னை: நில மோசடி வழக்கு குறுக்கு விசாரணைக்கு நடிகர் வடிவேலு ஆஜராக வேண்டும் என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் 2007ல் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து வழிகாட்டுதலின்படி, தாம்பரம் அருகே பெருங்களத்துாரில் 3.52 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். சில மாதங்களுக்கு பின் வடிவேலுவிடம், நீங்கள் வாங்கிய நிலம் அருகே, குடிநீர் வாரிய அலுவலகம் வர உள்ளது. இதனால் அந்த நிலத்தை, அரசு கையகப்படுத்த உள்ளது. அதற்குள் வேறு நபருக்கு விற்று விடலாம் என, சிங்கமுத்து கூறியுள்ளார்.
இதனால், அந்த நிலத்தை விற்பனை செய்ய, சிங்கமுத்து தெரிவித்தபடி, தாம்பரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு, பொது அதிகார பத்திரம் வழங்கியுள்ளார் வடிவேலு. நிலத்தை தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக கூறிய சேகரும், சிங்கமுத்துவும், அந்த பணத்தை வடிவேலுவிடம் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில், 2010ல் வடிவேலு வீட்டில், வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பெருங்களத்துாரில் வாங்கிய நிலம் 1.93 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கு ஏன் வரி செலுத்தவில்லை? என, அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த வடிவேலு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார், சிங்கமுத்து, சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில், எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததை மறைப்பதற்காக, வடிவேலு தங்கள் மீது பழி சுமத்துவதாக, சிங்கமுத்து மற்றும் சேகர் தரப்பினர் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
மேலும், இவர்கள் தரப்பிலான வழக்கறிஞர்கள், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், செப்., 29ல் ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு, நீதிபதி நாகராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜரானார். வடிவேலு படப்பிடிப்பில் இருப்பதால், ஆஜராக இயலவில்லை; அவருக்கு கால அவகாசம் தர வேண்டும் என, கோரினார்.
சிங்கமுத்து வழக்கறிஞர் அறிவழகன், வழக்கை வடிவேலு இழுத்தடித்து வருவதாக வாதிட்டார். டிச., 7ல், வடிவேலு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.