ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரோனா இரண்டாவது அலை முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ இல்லையோ, சினிமா தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 11 படங்கள் வரை வெளிவந்தாலும் 'கோடியில் ஒருவன்' படம் மட்டும் தான் லாபகரமான படமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் 1ம் தேதியிலேயே புதிய பட வெளியீட்டுடன்தான் மாதம் ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் வெளிவரப் போகிறது. அதற்கடுத்து அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 'அரண்மனை 3, எனிமி, ராஜவம்சம், தள்ளிப் போகதே' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில படங்கள் இடம் பெறுமா, அல்லது இதிலேயே சில படங்கள் வெளியேறுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
இப்போதைய நிலவரப்படி ஒரு 'பேய் காமெடி, ஒரு ஆக்ஷன், ஒரு பேமிலி, ஒரு லவ்' என நான்கு விதமான படங்கள் களத்தில் நிற்கின்றன. அக்டோபர் 14க்குள் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால், இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் நல்ல வசூலைப் பெற வாய்ப்புள்ளது.