வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் |
தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2006ல் வெளிவந்த 'கேடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. ஆனால், 'கல்லூரி' படத்தின் மூலம்தான் தமிழில் பிரபலமானார். அதன்பிறகு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2019ல் விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் தமன்னா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் மன அழுத்தத்தில் இருந்ததால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், எந்த மாதிரியான மன அழுத்தம், உடல்நலனுக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
உடல்நலன் கருதி தற்போது ஆர்கானிக் உணவு வகைகளை மட்டும் தமன்னா உட்கொண்டு வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம். அனேகமாக, அடுத்த இரண்டு வருடங்களில் அவர் திருமணம் செய்து கொள்வார் என்கிறார்கள்.