'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு நாய் சேகர் என்ற பெயரை பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க சிக்கல் உருவானது.
இதனிடையே, சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிடுகிறார்கள். அப்போது படத்தின் பெயர் யாருக்கு என்பது தெரிந்துவிடும்.
நாய் சேகர் என்பது சுராஜ் இயக்கத்தில், சுந்தர் சி கதாநாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர். அந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையும், அந்தக் கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதிந்த ஒன்று. அந்தப் பெயர் வடிவேலு நடிக்கும் படத்திற்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
அந்தப் பெயரையும், கதாபாத்திரத்தையும் சுராஜ், வடிவேலு ஆகியோர் இணைந்து தான் உருவாக்கியிருப்பார்கள். அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்துவதற்குத்தான் நியாயமான உரிமை உள்ளதென்றும் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
வடிவேலுவின் பல நகைச்சுவை வசனங்கள் பாடல்களிலும், படங்களிலும் பல்வேறு விதங்களில் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நியாயமாக அவரிடம் அதற்கு அனுமதி பெற்றுத்தான் மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும். சதீஷ் படக்குழுவினர் என்ன செய்துள்ளார்கள் என்பது இன்று மாலை தெரியப் போகிறது.