3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
தமிழில் 1993ல் வெளிவந்த 'பொன்னுமணி' படத்தின் மூலம் அறிமுகமானவர் சௌந்தர்யா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் 'அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, இவன்' உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். 2004ம் ஆண்டு பாஜகவிற்காக தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறு வயதிலிருந்தே என்னைப் பார்த்து சவுந்தர்யா போல இருப்பதாக அப்பா சொல்வார். அதனால், அவர் மீது எனக்கு சிறு வயது முதலே அதிக ப்ரியம் உண்டு. அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது,” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் சமீப காலத்தில் நடிகை சாவித்ரி, நடிகை ஜெயலலிதா ஆகியோரது பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் சவுந்தர்யா பயோபிக்கை யாராவது தயாரிக்க முன் வருவார்களா என்பது இனிமேல் தான் தெரியும். ஒருவேளை ராஷ்மிகா அதில் நடிக்கத் தயாராக இருப்பதால் சீக்கிரம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.