ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் ஷபீர். சாகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, நீயா 2 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல பாடல்களையும் பாடி உள்ளார். தற்போது அருண் விஜய் நடிக்கும் சினம் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
ஷபீர் தமிழ் படங்களுக்கு இசை அமைத்து வந்தாலும் சிங்கப்பூரில் தயாராகும் தமிழ் படங்களில் நடித்து வருகிறவர். அவர் தற்போது திஸ் லேண்ட் இஸ் மைன் என்ற ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார். ஆங்கில படையில் ராணுவ வீரர்களாக இருந்த இந்தியர்களை பற்றிய கதை.
இதில் தி டைகர் ஆப் ரங்கூன் என்று அழைக்கப்பட்ட ஹபியுல்லா கான் கேரக்டரில் ஷபிர் நடித்து வருகிறார். போரில் ஒரு கையை இழந்த ஹபியுல்லா கான் அதன் பிறகும் ராணுவத்தில் சாதித்த கதை. இந்த கேரக்டருக்காக கையை பின்னால் மடித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் நடித்துள்ளார். ஷபீர் சத்தமில்லாமல் ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.