நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா |
கடந்த வாரம் தெலுங்கில் கோபிசந்த் - தமன்னா நடிப்பில் வெளியான சீட்டிமார் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாக தயாரிப்பாளரையும் தியேட்டர்காரர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு வெளியாகும் படங்களில் முதல் வெற்றிப்படம் என்கிற பெருமையையும் இந்தப்படம் பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து கோபிசந்த் நடித்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் கிடப்பில் இருக்கும் 'ஆறடுகுள்ள புல்லட்டு' என்கிற படத்தையும் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம் தயாரிப்பாளர்கள். இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது தான் ஸ்பெஷல்.. தெலுங்கில் நயன்தாரா பீக்கில் இருந்த நேரத்தில் அதாவது 2012ல் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் இந்த 'ஆறடுகுள்ள புல்லட்'... இந்தப்படத்தை முதலில் பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்து, சில காரணங்களால் பின்னர் சீனியர் இயக்குனரான பி.கோபால் இந்தப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படம் ஆரம்பித்த சமயத்தில் தான், நயன்தாரா அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு தமிழ்ப்படங்களில் மட்டும் கவனம் காட்ட ஆரம்பித்தார். தவிர வேறு சில பிரச்சனைகளாலும் படப்பிடிப்பு அவ்வப்போது தள்ளிப்போனது.
ஆனாலும் நயன்தாராவிடம் இருந்து கிடைத்த தேதிகளை வைத்து ஒரு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனராம்.. இப்போது கோபிசந்த்தின் சீட்டிமார் பட வெற்றி காரணமாக சூட்டோடு சூடாக இந்தப்படத்தையும் ரிலீஸ் செய்யும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனராம்.