மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், இப்படத்தின் டீசர் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த படத்தையடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக, அடுத்த ஆண்டில் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வரப்போகிறது.