சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
2005ல் சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கிய ஐயா படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகையான நயன்தாரா. அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகியகாகவே வலம் வருகிறார். அதோடு, கடந்த காலங்களில் சிம்பு, பிரபு தேவாவை அடுத்தடுத்து காதலித்த நயன்தாரா, பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் திருமணம் தடைபட்டது.
இந்தநிலையில் தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா, அவரை எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது சஸ்பென்சாக உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட நயன்தாரா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு குடும்ப வாழ்க்கையில் பயணிக்க விரும்பும் நயன்தாரா பின்னாளில் படங்களை தயாரிப்பது, டைரக்சன் செய்வது என்று தனது கவனத்தை திருப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இந்த மொழி படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொள்வார் என தெரிகிறது.