சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கே.வில்லியம்ஸ். புல்லட், ஹல்க், அடிக்ட்ஸ், ரோபோ காப், பஸ்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தி வயர் என்ற வெப் தொடர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
54 வயதான மைக்கேல் அமெரிக்காவின் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் வசித்து வந்தார். உறவினர் ஒருவர் அவரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த நியூயார்க் காவல்துறையினர் மைக்கேல் கே.வில்லியம்சின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது வீட்டில் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதன் மூலம் அவர் அளவுக்கு அதிகமாக போதை மாத்திரை சாப்பிட்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. என்றாலும் மரணத்துக்கான காரணத்தை போலீசார் உறுதி செய்யவில்லை. மைக்கேலின் மரணம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.