ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பினை பெற்றார் பா.ரஞ்சித். அதன்பிறகு ஆர்யா நடிப்பில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை ஓ.டி.டி.,யில் வெளியானது. இந்நிலையில் அடுத்து பா.ரஞ்சித் எந்த மெகா ஹீரோவை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியது.
ஆனால் அவரோ மீண்டும் அட்டகத்தி பாணியில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயனை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை அடுத்து விக்ரமை வைத்து பா.ரஞ்சித் ஒரு படம் இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோபடம் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதோடு, சூப்பர் ஹீரோ என்றால் கற்பனையான விசயங்களை சொல்லப்போவதில்லை. கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள தொடர்பினை வைத்து ஒரு கதை பண்ணியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, விஜய் என் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை சூப்பர் ஹீரோவாகத்தான் நடிக்க வைப்பேன். அதற்கு விஜய் ரொம்ப பொருத்தமாக இருப்பார் என்று டைரக்டர் மிஷ்கினும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.