'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களுக்குமான இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே, படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அவருடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு வந்தியத் தேவன் ஆக நடிக்கும் கார்த்தி, “இளவரசே, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக் கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன்,” என பதிலளித்துள்ளார்.
இதுநாள் வரையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் யார், யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் என்பது ஒரு யூகமாகத்தான் வெளிவந்து கொண்டிருந்தது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் இளவரசன் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் ஆக கார்த்தியும் நடிக்கிறார்கள் என்பது, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரது டுவிட்டர் பதிவின் மூலம் 'சோழ ரகசியம்' வெளிவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே கார்த்தி இப்படி பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் அனுமதி இல்லாமல் அவர் இப்படி செய்திருக்கவும் வாய்ப்பில்லை.
கார்த்தி டுவிட்டரின்படி இன்னும் ஆறு நாட்களில் மத்தியப் பிரதேச படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறதா அல்லது மீண்டும் சென்னையிலோ, ஐதராபாத்திலோ படப்பிடிப்பு நடைபெறுமா என்பது விரைவில் தெரிய வரும்.




