மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கி, ஏகப்பட்ட பாராட்டுகளை அள்ளியவர் அபிஷன் ஜீவிந்த். திருச்சி பையன், சென்னையில் படித்தவர். அந்த படம் 90 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததுடன், தரமான படம் என்ற நல்ல விமர்சனத்தையும் பெற்றது. ரஜினிகாந்த் தொடங்கி பலர் அபிஷனை அழைத்து பாராட்டினார்கள். அடுத்து அவரின் படம் எது என்று கேள்வி எழுந்தபோது அவர் தனுசை வைத்து படம் இயக்க தயாராகி வருவதாக கூறப்பட்டது. சில வாரங்கள் கழித்து அவரே ஹீரோவாக நடிக்கப்போகிறார். அதற்கான வேலைகள் நடக்கிறது என்று தகவல் கசிந்தது. ஆனால் அபிஷனோ நான் ஹீரோவாக நடிக்கவில்லை என்றார்.
இப்போது அவர் ஹீரோவாக நடிப்பது உறுதியாகிவிட்டது. நாளை மறுநாள் அபிஷன் ஜீவிந்த் கதைநாயகனா நடிக்க, அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடக்க உள்ளது. அந்த படத்தை அவரின் உதவியாளரான மதன் இயக்க, டூரிஸ்ட் பேமிலியை தயாரித்த மகேஷ் பசிலியான் தயாரிக்கிறார்.
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் டைரக் ஷனை விட்டு, இப்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். அந்த பாணியில் அபிஷனும் ஹீரோ ஆக உள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்திலும் அவர் சோகமான இளைஞராக நடித்து இருந்தார்.