வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' படம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எந்த அளவிற்கு சீரியசான விவாதம் வந்ததோ அதே அளவிற்கு அந்தப் படத்தின் சில காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பல மீம்ஸ்களை கிரியேட் செய்யவும் காரணமாக இருந்தது.
குறிப்பாக பசுபதியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஆர்யா செல்லும் காட்சி வெவ்வேறு விதமான மீம்ஸ்களாக வலம் வந்தது, தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு விண்வெளியைத் தவிர உலகமெங்கும் ஆர்யாவையும், பசுபதியையும் உலகம் சுற்ற வைத்தார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
பசுபதியின் பெயரிலேயே சில பல பொய்யான டுவிட்டர் கணக்குகள் இருக்க, இன்று பசுபதியின் உண்மையான டுவிட்டர் கணக்கைப் பகிர்ந்து, “வாத்தியாரே இதான் டுவிட்டர் வாத்தியாரே, பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஒரிஜனல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசுதான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்,” என சுவாரசியமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
வாத்தியாரும், கபிலனும் இன்னும் சுற்றாத இடங்களையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் சுற்ற வைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.