'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். தற்போது 2டி நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, எங்கள் லோகோவையும் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் சில மோசடியான நபர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இருப்பதை அறிந்தோம்.
இந்த ஏமாற்று வேலை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். 2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடிஷன் நடத்துவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது போன்ற ஆடிஷன் நடத்துவதில்லை. மேலும் ஆடிஷன்களுக்கு நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.
எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. எனவே இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய ரகசிய தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




