பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி 'கந்தாரா' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். தற்போது அவர் கைவசமாக 'கந்தாரா சாப்டர் 1, ஜெய் ஹனுமான், சத்ரபதி சிவாஜி மகாராஜ்' போன்ற பான் இந்திய படங்கள் உள்ளது.
இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி மற்றொரு பான் இந்திய படத்தில் நடிக்கவுள்ளார் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் 36வது படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அஸ்வின் கங்கராஜூ என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஆகாசவாணி என்கிற படத்தை இயக்கியுள்ளார். மேலும், இவர் ராஜமவுலியின் 'நான் ஈ, பாகுபலி 1,2' போன்ற படங்களில் இணை இயக்குநர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.