தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
சுபலட்சுமி பிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ள படம் 'உழவர் மகன்'. தோனி கபடிகுழு, கட்சிக்காரன் படங்களை இயக்கிய ப. ஐயப்பன் இயக்கியிருக்கிறார். கதையின் நாயகனாக கௌஷிக் நடித்துள்ளார்.
நாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் இருவரும் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர விஜித் சரவணன் ,யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பவை எவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசுகிறது.விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் உள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம், என்றார்.