'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கூலி'. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருவதையொட்டி இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் லோகேஷ் திவீரமாக ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் லோகேஷ் அவர் படித்த கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியின் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் கூறுகையில், "2003 - 2006 காலகட்டத்தில், கல்லூரியில் படிக்கும்போது, நாங்கள் பார்த்த பெரும்பாலான படங்கள் சூர்யா சாரின் படங்கள் தான். நான் சூர்யா சாருடன் பணிபுரிய விரும்புகிறேன். இருவருக்கும் சரியான நேரம் அமையும்போது நிச்சயம் சூர்யா சாரை வைத்து படம் இயக்குவேன்.” எனக் கூறி சூர்யா ரசிகர்களைக் குஷி செய்துள்ளார்.