மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
சென்னை: 'நடிகர் சிலம்பரசன் விவகாரம், நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது' என, உஷா ராஜேந்தர் கூறியுள்ளார்.
நடிகர் சிலம்பரசனுக்கும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், லிங்குசாமி, பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலருக்கும் இடையே, பண விவகாரம் தொடர்பாக மோதல் உள்ளது. 'சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டாம்' என, 'பெப்சி' தொழிலாளர் கூட்டமைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இதனால், சிலம்பரசன் நடிக்கும், 'வெந்து தணிந்தது காடு' படம் தடைபடும் சூழல் உருவானது. பின், படத்தின் தயாரிப்பாளர் பேச்சு நடத்தி, படப்பிடிப்பை தொடங்கினார்.
இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன், சிலம்பரசனின் தாய் உஷா நேற்று பேசினார். பின், அவர் வெளியிட்ட அறிக்கை: தயாரிப்பாளர் சிவசங்கரன் உடனான பிரச்னைக்கு, பேசி தீர்வு காணப்பட்டது. இதற்கான கடிதத்தை, தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுத்துள்ளார். லிங்குசாமி உடனான பிரச்னையில், மனிதாபிமானம் அடிப்படையில், வட்டியில்லாத முன்தொகையை, திருப்பித் தர சம்மதித்துள்ளோம். பி.டி.செல்வகுமார் மற்றும் டி.ராஜேந்தர் உடனான பிரச்னையில், சிலம்பரசனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்னை, நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. இதற்கு முன், சிலம்பரசன் மீதான காழ்ப்புணர்ச்சியால், அவர் நடிக்க முடியாதபடி, விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்தார். மைக்கேல் ராயப்பன் மீது, சிலம்பரசன் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அது குறித்து, தயாரிப்பாளர் சங்கம், எந்த கட்டப்பஞ்சாயத்தும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.