பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
புதுமுகம் ஆனந்தன் இயக்கத்தில் உருவான சக்ரா படத்தில் விஷால் நடித்திருந்தார். விஷால் பிலிம் பேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக விஷால் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விஷால் மீது பொய்வழக்கு தொடர்ந்ததாக கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் லைக்கா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் "நீதி வெல்லும் மற்றும் உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகவும் 'சக்ரா' திரைப்படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்று தெரிவித்திருந்தார்.
இந்த 5 லட்சத்தை வழக்கு செலவாக லைக்கா நிறுவனம் விஷாலுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த பணத்தை ஏழை மாணவிகளின் கல்வி செலவுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் மூலம் கிடைக்கும் 5 லட்சத்தையும் தேவி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவேன். என்றார்.