டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

குக் வித் கோமோளி பிரபலங்களான அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இருவரும் சித்து குமார் இசையமைத்துள்ள அடிபொலி என்ற ஆல்பம் பாடலில் பணியாற்றி உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஜோடி அஸ்வின் - சிவாங்கி தான். அந்த நிகழ்ச்சியில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இருவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவே ஷுட்டிங்கில் பிஸியாகிவிட்டனர்.
இந்நிலையல் சிவப்பு மஞ்சள் பச்சை பட இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் ஷிவாங்கி அடி பொலி என்ற பாடலைப் பாடியுள்ளார். அந்த பாடலில் அஸ்வின், குஷி ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த செய்தி அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தப் பாடல் நேற்று வெளியாகிவுள்ள நிலையில் 18 மணிநேரத்தில் 15 லட்சம் பார்வைகளை தாண்டி வரவேற்பை பெற்றுள்ளது.




