துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
தமிழ் சினிமா உலகில் சில நடிகைகளுக்குத்தான் அதிகமான பிரபலமும், பெயரும் கிடைக்கும். 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நதியாவுக்கு அப்படி ஒரு பெயர் கிடைத்தது. அதன்பின் 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த குஷ்புவுக்குக் கிடைத்தது.
குஷ்புவுக்குக் கோயில், குஷ்பு இட்லி என சிலை வைக்கும் அளவிற்கும், இட்லிக்குப் பெயர் வைக்கும் அளவிற்கும் பிரபலமானவர் குஷ்பு. அரசியலிலும் இறங்கி மூன்று கட்சிகள் மாறிவிட்டாலும் தனது டுவீட்கள் மூலம் அடிக்கடி அதிரடி காட்டுபவர்.
தற்போது சினிமா, டிவி என மீண்டும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையைக் குறைக்க கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. இருபது நாட்களுக்கு முன்னதாகக் கூட தனது எடை குறைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று டுவீட்டி இருந்தார்.
இன்று மீண்டும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கடின உழைப்பு முடிவுகளை அளிக்கும் போது அந்த மகிழ்ச்சியை விளக்க முடியாது,” என டபுள் ஹாட்டின் எமோஜியுடன் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, 'நம்புங்க மக்களே, குஷ்புதான் இது” என்றுதான் சொல்லத் தோன்றும்.