ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிவித்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் இப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே 'ராக்கி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'சாணிக் காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ஏதோ ஒரு 'சம்பவம்' செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கொரோனா அலைகளைத் தாக்குப் பிடித்து தற்போது படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். “சாணிக் காயிதம்' படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், குழுவினருக்கும் நன்றி,” என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.