என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பாகுபலி : தி எபிக் என்கிற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டு 3 மணி 44 நிமிடம் ஓடும் விதமாக இன்று வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கம் ஏற்கனவே பாகுபலி அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது என்ற தகவலும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு பாகுபலி : தி எட்டர்னல் வார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜமவுலி சமீபத்தில் கூறுகையில், “இது பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் அல்ல. ஆனாலும் அந்த உலகத்தின் தொடர்ச்சி தான். இன்று பாகுபலி திரையிடப்படும் திரையரங்குகளில் இடைவேளையில் இந்த அனிமேஷன் பாகுபலி ட்ரைலரும் வெளியிடப்படும். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் மிகவும் தரம் வாய்ந்த அனிமேஷன் தரத்துடன் இந்த படம் உருவாகி இருக்கிறது” என்று  கூறியுள்ளார். 
 
           
             
           
             
           
             
           
            