என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. முதல் படத்திலேயே ஒரு இயக்குனராக இவர் வெற்றி முத்திரையை பதித்தவர். அந்த படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்து பாராட்டையும் பெற்றார். 
தற்போது அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கின்றார். இந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலன் அவரின் எம்.ஆர்.பி எண்டெர்டெயிமென்ட் நிறுவனங்களின் மூலம்  இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கவில்லை. ஏற்கனவே இந்த படத்திற்கு 'ஆட்டோகிராப்', 'பிரியமுடன்' என இரு பழைய படங்களின் தலைப்பை முடிவு செய்து படக்குழு தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தலைப்பை பயன்படுத்த அனுமதி தரவில்லை. இதனால் இப்போது இந்த படத்திற்கு 'வித் லவ்' என தலைப்பு வைத்து விடலாம் என்கிற சிந்தனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
           
             
           
             
           
             
           
            