வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு |
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. அப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்கிறார்கள். மோகன்ராஜா படத்தை இயக்க தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஆக.,13) முதல் ஆரம்பமாவதாக இசையமைப்பாளர் தமன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
“வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். சிரஞ்சீவியின் 153வது படத்திற்கு ஒரு பாடலை நிறைவு செய்துள்ளோம். சிரஞ்சீவி சார் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பெரிய ரசிகனாக எனக்கு இது மிக சிறப்பான ஒன்று. நாளை படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. எங்கள் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு வாழ்த்துகள்” என அப்டேட் கொடுத்துள்ளார்.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்குப் பிறகு தமன் தெலுங்கில் மிகவும் பிஸியாகிவிட்டார். பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகான்டா', நானி நடிக்கும் 'டக் ஜகதீஷ்', வருண் தேஜ் நடிக்கும் 'கானி', மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', பவன் கல்யாண், ராணா நடிக்கும் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக், ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்திற்கு முதல் முறையாக இப்போது தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.