50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். அதோடு கார் பந்தயங்களில் கலந்துக் கொண்டு சாதனை செய்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி புகைப்படக் கலைஞராகவும், சிறிய ரக விமானங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், சென்னையில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் அடிக்கடி சென்று துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த பயிற்சியின் முடிவில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், அந்த படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்கியுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் ஐதராபாத்தில் உள்ள துப்பாக்கி பயிற்சி அகடமியில் அஜித் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் அசத்தலான துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.